UPDATED : ஆக 29, 2025 12:00 AM
ADDED : ஆக 29, 2025 08:29 AM
கோவை:
மலேசியாவின் யூகேஎம் பல்கலையில் 23, 24ல் சர்வதேச ஐஇஇஇ (இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ்) அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி நடைபெற்றது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று, 150க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளைச் சமர்ப்பித்தனர்.
கோவை அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று, நேரடி ஒளிபரப்பு (லைவ் ஸ்ட்ரீமிங்) கேமராவுடன் ப்ளூடூத் கட்டுப்பாடு வசதியுடன் கூடிய, தீயணைப்பு ரோபோ மற்றும் டிரான்சிஸ்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, நீர்மட்டத்தைக் கண்டறியும் கருவியை காட்சிப்படுத்தினர்.
8ம் வகுப்பு மாணவர்களான ஐசக் ஜெபக்குமார், மருதீஷ் மற்றும் 9ம் வகுப்பு மாணவர் சங்கரா ஆகியோர் இணைந்து உருவாக்கிய தீயணைப்பு ரோபோ, சிறந்த கண்டுபிடிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறாவது பரிசை வென்றது.