UPDATED : ஜூன் 22, 2024 12:00 AM
ADDED : ஜூன் 22, 2024 10:28 AM
கடலுார்:
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வேப்பூர் பகுதி மாணவர் விடுதிகளில் கலெக்டர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில், வேப்பூர் பகுதியில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி ஆகியவற்றில் ஆய்வு செய்த கலெக்டர், மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்டிருந்த இரவு உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார்.
மேலும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என, ஆய்வு செய்த அவர், விடுதி அறைகள் மற்றும் கழிவறைகள் துாய்மையாக பராமரிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நல்லுார் மற்றும் சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், மங்களூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.