மாணவர்கள் இடை நிற்றலை தவிர்க்க ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
மாணவர்கள் இடை நிற்றலை தவிர்க்க ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
UPDATED : நவ 09, 2024 12:00 AM
ADDED : நவ 09, 2024 11:22 AM
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் கடத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில், 375 மாணவர்கள் படிக்கின்றனர்.
25 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இங்கு நேற்று மதியம், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் கற்றல் திறன் நிலைபாடு, கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டார். பின் காலாண்டு தேர்வின் விடைத்தாள்களை வைத்து கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்களிடத்தில் தனித்தனியாக தேர்ச்சி விழுக்காடு, மதிப்பெண் குறித்து கேட்டறிந்தார்.
மாணவர்கள் இடை நிற்றலை தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு காலை, மாலை, சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய கல்வி மட்டுமே கைகொடுக்கும். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பல சலுகைகள் வழங்குகிறது. அதை பயன்படுத்தி, மாணவர்கள் நன்கு பயின்று, முன்னேற்றம் அடைய, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது தலைமை ஆசிரியர் மணி, தாசில்தார் வள்ளி உள்ளிட்ட ஆசிரியர்கள் இருந்தனர். இதேபோன்று நல்லகுட்லஹள்ளி ஏரி, பொதியம்பள்ளம் அணைக்கட்டு பகுதிகளில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி பொறியாளர் கிருபா உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.