அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு; மாணவர்களுடன் கலந்துரையாடல்
அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு; மாணவர்களுடன் கலந்துரையாடல்
UPDATED : ஜூலை 03, 2025 12:00 AM
ADDED : ஜூலை 03, 2025 08:18 AM
பல்லடம்:
கரைப்புதுார் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
சமீபத்தில், திருப்பூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற மனிஷ் நாரணவரே, பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, கரைப்புதுார் ஊராட்சி அங்கன்வாடி மையம் மற்றும் அரசு பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, அங்கன்வாடி மைய குழந்தைகளின் வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற எடை, உயரம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தார்.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கரைப்புதுார் அரசு நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்து, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். மாணவர்களிடமும் சிறிது நேரம் கலெக்டர் கலந்துரையாடினார்.