UPDATED : செப் 21, 2024 12:00 AM
ADDED : செப் 21, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்:
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
பள்ளியில் வகுப்பறைகள், நுாலகம், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்த கலெக்டர், பள்ளியில், அடிப்படை வசதிகள் உள்ளதா என, ஆய்வு செய்து, ஆசிரியர்கள், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருகிறர்களா என்பது குறித்து விசாரித்தார்.
பின்னர் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கலிதீர்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.