மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 11:01 AM

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை வளாகம் மற்றும் விடுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவக் மாணவர்கள், கல்லுாரி வளாகம் மற்றும் விடுதியில் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்து மருத்துவக் கல்லுாரிக்குத் தேவையான கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துதல் மற்றும் கூடுதலாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மருத்துவ அலுவலர்களுக்கு கலெக்டர் உரிய அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், மருத்துவக் கல்லுாரி வளாகம் மற்றும் மருத்துவமனையில் ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனுக்குடன் சம்மந்தப்பட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் மருத்துவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் நேரு, டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.