UPDATED : ஜன 15, 2025 12:00 AM
ADDED : ஜன 15, 2025 10:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரை பைபாஸ் ரோடு அருகே வசிப்பவர் எம்.எஸ்.ஷா; கல்லுாரி நடத்தி வருகிறார். கடந்தாண்டு 15 வயது மாணவியின் தந்தை, மதுரை தெற்கு அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதில், என் மகளின் அலைபேசிக்கு ஷாவின் எண்ணில் இருந்து தொடர்ந்து ஆபாச உரையாடல் வந்தது. விசாரித்தபோது, இதற்கு என் மனைவியும் உடந்தை என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட், புகாரில் உண்மைக்கான முகாந்திரம் இல்லை என தெரிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அறிவியல்பூர்வமான ஆதாரங்களை சேகரித்து, நேற்று ஷா மற்றும் சிறுமியின் தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.