தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி


UPDATED : மே 16, 2024 12:00 AM

ADDED : மே 16, 2024 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2024 12:00 AM ADDED : மே 16, 2024 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை அரசு பள்ளி மேல்நிலை வகுப்பு மாணவர்ளுக்கான, கல்லுாரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

மாநில அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தற்போது பிளஸ் 2 எழுதிய மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, 'கல்லுாரி கனவு' என திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், திருப்பூர், உடுமலையில் நடந்தது.

உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், நேற்று காலை, 9:00 மணி முதல் மதியம், 12:30 மணி வரை நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், கல்வித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு கல்லுாரிகளைச்சேர்ந்த கருத்தாளர்கள், ஐ.டி.ஐ., பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் பங்கேற்று மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.

இதில் கல்லுாரிகளில் உள்ள உயர்கல்வி படிப்புகள், அதற்கான எதிர்கால வேலைவாய்ப்புகள், படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகை, கலந்தாய்வில் விண்ணப்பிப்பது, அரசின் திட்டங்கள் குறித்து கல்வியாளர்கள் விளக்கமளித்தனர்.

மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதி அரசு பள்ளிகளைச் சேர்ந்த 340 மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us