100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கல்லுாரி மாணவியர் விழிப்புணர்வு
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கல்லுாரி மாணவியர் விழிப்புணர்வு
UPDATED : ஏப் 08, 2026 05:41 PM
ADDED : ஏப் 08, 2026 05:43 PM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, கல்லுாரி மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, 'தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா' என்ற தலைப்பில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், அரசு மகளிர் கலைக் கல்லுாரி மாணவியர், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், 2,800 மாணவியர், 'KRISHNAGIRI VOTES - 100 % - 23.04.2026' என்ற எழுத்து வடிவில் ஒருசேர நின்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் பார்வையிட்டார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கூடுதல் கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா, துணை கலெக்டர் (பயிற்சி) சவுமியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் சிவபிரகாசம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
