தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை அளவிலான தடகள போட்டி கல்லுாரி மாணவர்கள் உற்சாகம்

பல்கலை அளவிலான தடகள போட்டி கல்லுாரி மாணவர்கள் உற்சாகம்

பல்கலை அளவிலான தடகள போட்டி கல்லுாரி மாணவர்கள் உற்சாகம்


UPDATED : நவ 21, 2026 04:34 AM

ADDED : நவ 21, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 04:34 AM ADDED : நவ 21, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரத்தில், பல்கலைக்கழக கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான தடகள போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், அண்ணாமலை பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையேயான மூன்றாம் ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டி காலை துவங்கி நடந்தது. கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் போட்டிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குநர் சிவக்குமார், விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி முதல்வர் மாதவி முன்னிலை வகித்தனர். விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள 88 கல்லுாரிகளை சேர்ந்த, 400 க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவிகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

இதில், 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1,500 மீட்டர் ஓட்டப் போட்டிகள் மற்றும் மினி மாரத்தான், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது. முதல் நாளான இன்று மினி மாரத்தான் மற்றும் ஓட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு திறனை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, இன்றும் போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டிகளை அரசு கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் ஜோதிப்பிரியா, ஒருங்கிணைப்பாளர் நாராயணன், தமிழ்நாடு தடகள சங்க நடுவர் அண்ணாமலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

இந்த போட்டிகள், மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், தேர்வாகும் கல்லுாரி மாணவர்கள், அனைத்து பல்கலை., அளவில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என தெரிவித்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us