ரிக் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு
ரிக் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு
UPDATED : ஏப் 10, 2026 07:24 PM
ADDED : ஏப் 10, 2026 07:26 PM
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க வளாகத்தில், தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தொழிலாளர் நலத்துறை சார்பில், ரிக் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்காமூர்த்தி, 100 சதவீதம் ஓட்டுப்பதிவை அடையும் வகையில், ரிக் வாகனங்கள் மூலம், 4 விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டார்.
இந்த பேரணி, திருச்செங்கோடு நான்கு ரதவீதி வழியாக சென்றது. கல்லூரி மாணவ, மாணவியர், ரிக் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கல்லூரிகளை சேர்ந்த முதல்முறை ஓட்டு போட உள்ள 30 மாணவ, மாணவியருக்கு, தேசிய கொடி வண்ணத்தில் கை பேண்ட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், மாணவ, மாணவியர் 'மை வோட்: நாட் பார் சேல்' என்ற வடிவிலான பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதயைடுத்து, வாகனங்களில் தேர்தல் நாள் குறித்த விழிப்பு-ணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம், தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்டு போடப்பட்ட கோலத்தை, கலெக்டர் பார்வையிட்டார்.
திருச்செங்கோடு நகராட்சி, சட்டையம்புதூர் நகராட்சி தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி ஆய்வு செய்தார்.
திருச்செங்கோடு தேர்தல் நடத்தும் அலுவலர் லெனின், தொழிலாளர் நல உதவி ஆணையர் இந்தியா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
