அரசு கல்லுாரி மாணவர்களுக்கு ஆணைய பயிற்சியாளர் பயிற்சி
அரசு கல்லுாரி மாணவர்களுக்கு ஆணைய பயிற்சியாளர் பயிற்சி
UPDATED : ஜூலை 09, 2026 05:25 PM
ADDED : ஜூலை 09, 2026 05:26 PM
விழுப்புரம்:
விழுப்புரத்தில் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிபுணத்துவ பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் கபடி பயிற்சி அளித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிபுணத்துவ பயிற்சியாளராக கவிதா செல்வராஜ் உள்ளார். இவர், விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு, கபடி விளையாட்டில் திறன்மிக்க நுணுக்கங்கள், அட்வான்ஸ் ஸ்கில் அண்ட் டெக்னிக்ஸ் பற்றி நேற்று முதல் இரு தினங்கள் பயிற்சி அளிக்கிறார்.
பயிற்சியாளர் கவிதா செல்வராஜை, மரியாதை நிமித்தமாக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்சியாளர் அன்புராஜ், மாநில நடுவர் பாலமுருகன் ஆகியோரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
