தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1,330 குறள்கள் ஒப்புவித்த மாணவ - மாணவியருக்கு பாராட்டு

1,330 குறள்கள் ஒப்புவித்த மாணவ - மாணவியருக்கு பாராட்டு

1,330 குறள்கள் ஒப்புவித்த மாணவ - மாணவியருக்கு பாராட்டு


UPDATED : ஜன 26, 2026 08:59 PM

ADDED : ஜன 26, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2026 08:59 PM ADDED : ஜன 26, 2026 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்:
திருக்குறள் பயின்று, 1,330 குறள்களை ஒப்புவித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.

திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில், திருவள்ளுவர் கல்வி மன்றம், திருக்குறல் முற்றோதுதல் பயிற்சியகம் இயங்கி வருகிறது.

இந்த அமைப்பு சார்பாக, திருக்குறள் படிக்கும் ஆர்வத்தை, மாணவர்களிடம் ஊக்குவித்து பயிற்சி அளித்து, ஒவ்வொரு ஆண்டும் 1,330 குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்தாண்டு 19 மாணவ, மாணவியர் 1,330 குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்தனர். இவர்களுக்கான பாராட்டு விழா, நேற்று கேளம்பாக்கத்தில் நடந்தது.

விழாவில், 1,330 குறள்களை ஒப்புவித்த மாணவ, மாணவியரை அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

கேளம்பாக்கம் கமலா நகரிலிருந்து புறப்பட்டு, திருவள்ளுவர் பிரதான சாலை வழியாக மன்றம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, மாணவ மாணவியர் திருவள்ளுவர், பாரதியார் வேடமனிந்தும், சிலம்பாட்டம், கோலாட்டம் ஆடியும் பங்கேற்றனர்.

இதையடுத்து, திருவள்ளுவர் கல்வி மன்ற நிறுவனர் பழனி மாணவ, மாணவியருக்கு 'குறளரசி, குறளரசன்' என்ற விருது, 1,000 ரூபாய், திருக்குறள் புத்தகம் வழங்கி, பாராட்டினர்.

விழாவில், ஊராட்சி தலைவர் ராணி, திருவள்ளுவர் கல்வி மன்ற நிறுவனர் பழனி, கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர், திருப்போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us