UPDATED : செப் 01, 2026 05:35 PM
ADDED : செப் 01, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு, புத்தாக்க பயிற்சி துவக்க விழா நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
முன்னாள் மாணவர்களான வருமான வரி கூடுதல் ஆணையர் அருண், அவேவா இண்டஸ்ட்ரியல் இன்டெலிஜென்ஸ் சாப்ட்வேர் மற்றும் சொல்யூஷன்ஸ் நிறுவன நிபுணர் காமினி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சுசீந்திரன், மாற்றம் டிரஸ்ட் சுஜித் குமார், கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன் பங்கேற்றனர். 'ரைஸ்' என்ற மாணவர் இதழ் வெளியிடப்பட்டது.
