UPDATED : மார் 03, 2026 11:01 AM
ADDED : மார் 03, 2026 11:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
கருணை அடிப்படையில், சுகாதாரப்பணியில், 86 பேரை, பா.ஜ.,வைச் சேர்ந்த, தில்லி மேயர் ராஜா இக்பால் சிங், நேற்று நியமித்தார்.
பணியின் போது இறந்த ஊழியர்களின் வாரிசுகள், 86 பேருக்கு, சுகாதார துறையில் பணியிடங்கள் வழங்கி, மேயர் இக்பால் சிங் நேற்று உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டி.இ.எம்.எஸ்., குழுவின் தலைவர் சந்தப் கபூர் கூறும் போது, “சுகாதாரத்துறையில் இது வரை, 1460 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், 562 பேர் கருணை அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணியாளர்களின் மன உறுதியை மேம்படுத்தும், பல திட்டங்களை டில்லி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது,” என்றார்.

