UPDATED : நவ 25, 2024 12:00 AM
ADDED : நவ 25, 2024 10:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் :
திண்டுக்கல் டட்லீ பள்ளியில் அறிவியல் பழகு-சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அறிவியல்,கணித அணுகு முறைகள் என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவர்களிடையே மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. தென் மண்டல வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், டட்லி பள்ளி தலைமை ஆசிரியர் தியோபிளஸ் ஜெயக்குட்டி பேசினர்.
மாவட்ட பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோப்பர், ஏ.ஐ.டி.இண்டியா ஒருங்கிணைப்பாளர் மணி அற்புத ராஜ்,டி.என்.எஸ்.எப். ஒருங்கிணைப்பாளர் வளர்மதி பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டியில் கலந்து கொள்வர்.