தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டி தேர்வு புத்தகங்களை கரூரிலேயே வாங்கலாம்: நுாலக அலுவலர் தகவல்

போட்டி தேர்வு புத்தகங்களை கரூரிலேயே வாங்கலாம்: நுாலக அலுவலர் தகவல்

போட்டி தேர்வு புத்தகங்களை கரூரிலேயே வாங்கலாம்: நுாலக அலுவலர் தகவல்


UPDATED : நவ 15, 2026 01:23 PM

ADDED : நவ 15, 2026 01:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 01:23 PM ADDED : நவ 15, 2026 01:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
“போட்டி தேர்வுக்கான புத்தகங்களை, கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் வாங்கலாம்,” என, கரூர் மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:


கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், தமிழ்நாடு பாடநுால் கழக விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாட புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் விற்பனைக்கு தயாராக உள்ளது.

போட்டி தேர்வுக்கான புத்தகங்களும், மாவட்ட மைய நுாலகத்தில் (கரூர் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில்) உள்ள மையத்தில் விற்பனைக்கு உள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், போட்டி தேர்வுக்கான புத்தகங்களை வாங்க, வெளி மாவட்டங்களுக்கு செல்ல தேவையில்லை.

இந்த மையம் ஞாயிற்று கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர, மற்ற நாட்களில் காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை இயங்கும். தற்போது வரை, 52 போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களின் விற்பனை நடந்துள்ளது. போட்டி தேர்வு பாடபுத்தகம், சிறப்பு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us