UPDATED : ஜன 22, 2025 12:00 AM
ADDED : ஜன 22, 2025 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு, மூடப்பட்ட பள்ளியில் இருந்து, மூன்று கணினிகள் திருட்டுப்போயின.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவுண்டம்பாளையம், ராமசாமி நகர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை பூட்டப்பட்டது. நேற்று முன்தினம் பள்ளியை திறந்தனர். கணினி அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மூன்று கணினிகள் திருட்டு போயிருந்தன. தலைமையாசிரியை முத்து ராஜாமணி புகாரின்படி, கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.