தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு


UPDATED : பிப் 11, 2026 01:47 PM

ADDED : பிப் 11, 2026 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2026 01:47 PM ADDED : பிப் 11, 2026 01:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சார்பில் சின்னசேலத்தில் 7 நாள் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது.

முகாமிற்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். முகாம் நிறைவு விழா சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பேராசிரியர் மகேந்திரன் வரவேற்றார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அற்புதவேல் சிறப்புரையாற்றினார்.

பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், பள்ளி தலைமையாசிரியர் வேல்முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம், கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில், என்.எஸ்.எஸ்., முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில் சிறப்பாக பணியாற்றிய என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி இயற்பியல் துறை தலைவர் மணிகண்டன் உட்பட கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us