UPDATED : ஜன 12, 2026 02:12 AM
ADDED : ஜன 12, 2026 02:12 PM
மதுரை: இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் புது மதுரை பசுமை உற்பத்தி 'எக்ஸ்' மாநாடு மதுரையில் நடந்தது.
'நிலையான தொழிற்துறை வளர்ச்சி அடுத்த பாய்ச்சல்' என்ற பொருளில் நடந்த மாநாட்டை கலெக்டர் பிரவீன்குமார் துவங்கி வைத்தார். அவர் பேசுகையில், 'தமிழக அரசு தனது கொள்கைகளில் கார்பன் சமப்படுத்துதல், நீடித்த இலக்குகள் உள்ளவாறு திட்டமிடுகிறது. சி.ஐ.ஐ., மதுரை மண்டலம் தொலைநோக்கு கட்டமைப்புடன் செயல்படுவது பாராட்டத்தக்கது' என்றார்.
மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான உள்கட்டமைப்பு, எதிர்கால தொழிற்துறை பற்றி பேசினர். மதுரையின் வளர்ச்சிக்கு கூட்டுத் திட்டமிடல், புதுமை, தொழிற்சார்ந்த முன்முயற்சிகள் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மண்டலத் தலைவர் அஷ்வின் தேசாய், முன்னாள் தலைவர் ராஜமோகன், ஒருங்கிணைப்பாளர்கள் சபாரத்தினம், கிருஷ்ணா மணி பங்கேற்றனர்.

