UPDATED : நவ 07, 2025 06:55 AM
ADDED : நவ 07, 2025 06:56 AM

திருநெல்வேலி:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடக்கிறது.
இளங்கலை வணிகவியல் பி.காம்., அரியர் தேர்வுகள் நேற்று மதியம் திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 108 கல்லுாரிகளில் நடந்தது. மூன்றாம் ஆண்டு பி.காம். மாணவர்களுக்கான மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் அரியர் தேர்வுக்கு பதிலாக ரீடைல் மார்க்கெட்டிங் வினாத்தாள் வழங்கப்பட்டது. எனவே தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டு வேறு வினாத்தாள் வழங்கப்பட்டது. ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வுகள் நடந்தன.
இதுகுறித்து பல்கலை வட்டாரம் கூறுகையில் ' பல்கலைக்கான வினாத்தாள்கள் சென்னையில் உள்ள அரசு செக்யூரிட்டி அச்சகத்தில் முன்னரே அச்சடிக்கப்படுகிறது. அவை அடங்கிய கட்டுகளின் வெளிப்பகுதியில் தனி கோடு எண்கள் தரப்பட்டுள்ளன. அந்த எண்கள் மாறியதால் வினாத்தாள்களும் மாறின. பின்னர் உடனடியாக சரி செய்யப்பட்டது.
மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் நேரம் தரப்பட்டது 'என கூறினர்.

