தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., கல்லுாரிகள் எண்ணிக்கையில் குழப்பம்

இன்ஜி., கல்லுாரிகள் எண்ணிக்கையில் குழப்பம்

இன்ஜி., கல்லுாரிகள் எண்ணிக்கையில் குழப்பம்


UPDATED : ஜூலை 23, 2026 11:00 PM

ADDED : ஜூலை 23, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 11:00 PM ADDED : ஜூலை 23, 2026 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
இன்ஜி., கலந்தாய்வு பொதுப்பிரிவு தொடங்கியுள்ள நிலையில், கல்லுாரிகள் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை கீழ் இயங்கும் இன்ஜி., கல்லுாரிகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. கலந்தாய்வில், 418 கல்லுாரிகள் பங்கேற்பதாகவும், மொத்தம் 1 லட்சத்து 98,825 பி.இ., பி.டெக்., இடங்கள் இருப்பதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், இன்ஜி., தரவரிசை பட்டியல் வெளியிடும் போது, 'ஏழு புதிய கல்லுாரிகள் உட்பட, மொத்தம் 484 இன்ஜினியரிங் கல்லுாரிகள் பங்கேற்கும்.

அங்கீகாரம் தொடர்பான பணிகள் நிறைவடைந்தவுடன், எவ்வளவு கல்லுாரிகள் பங்கேற்கும் என்பது இறுதி செய்யப்படும்' என தெரிவித்தார். அந்த வகையில், 418 கல்லுாரிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் அறிவிப்புக்கும், தற்போது வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது. இது, மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு, 423 இன்ஜினியரிங் கல்லுாரிகள் கலந்தாய்வில் பங்கேற்றன. அந்த வகையில், கடந்த ஆண்டை காட்டிலும், கல்லுாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இது குறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “அமைச்சர் பி.ஆர்க்., எம்.பி.ஏ., உள்ளிட்ட கல்லுாரிகளையும் சேர்த்து கூறியிருப்பார். 418 கல்லுாரிகளே கலந்தாய்வில் பங்கேற்கின்றன” என்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us