தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு


UPDATED : அக் 27, 2026 02:24 PM

ADDED : அக் 27, 2026 02:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 02:24 PM ADDED : அக் 27, 2026 02:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

வால்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள், கடந்த மாதம் நடந்தன. நடனம், பாட்டு, பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வட்டார அளவில் வெற்றி பெற்ற நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இதில் வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீநிலா, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் பரிசு பெற்றார். அவரை, பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா பாராட்டி பரிசு வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us