'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு
'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு
UPDATED : டிச 04, 2025 07:43 AM
ADDED : டிச 04, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளியில், 'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மகாலட்சுமி. இவர், 'தினமலர்' லட்சிய ஆசிரியர் - 2025 விருது பெற்றார். அதற்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்து, ஆசிரியரை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். விருது பெற்ற ஆசிரியரை வடக்கு வட்டார கல்வி அலுவலர்கள் வெள்ளியங்கிரி, நேசமணி பாராட்டினர்.
பள்ளி ஆசிரியர்கள் தேவி, மணிவேல், உஷா, சித்ரகலா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அய்யம்மாள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மாரியம்மாள் மற்றும் பலர் பாராட்டினர்.

