காரைக்குடியில் சட்டக் கல்லுாரிக்கு புதிய கட்டட பணி துரிதம்
காரைக்குடியில் சட்டக் கல்லுாரிக்கு புதிய கட்டட பணி துரிதம்
UPDATED : ஜூன் 27, 2024 12:00 AM
ADDED : ஜூன் 27, 2024 10:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி :
காரைக்குடியில் 2022ம் ஆண்டு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது.
அழகப்பா இன்ஜி., கல்லுாரியில் உள்ள கட்டடத்தில் தற்காலிகமாக கல்லுாரி செயல்பட்டு வருகிறது. சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி பல மாதங்களாக நடந்தது.
தற்போது திருச்சி- ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.100.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லுாரி கட்ட அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப்ரவரியில் நடந்தது.
புதிய கட்டடத்தில் 22 வகுப்பறைகள், மாதிரி நீதிமன்ற கட்டடம், நிர்வாக அலுவலகம், கலையரங்கம், உள் விளையாட்டு அரங்கம், மாணவ மாணவியர் விடுதி, குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டடம் கட்டப்படுகிறது. 18 மாதங்களில் பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.