பிரெஞ்சு மொழி நீக்கத்தை கண்டித்து தொடர் போராட்டம் அறிவிப்பு
பிரெஞ்சு மொழி நீக்கத்தை கண்டித்து தொடர் போராட்டம் அறிவிப்பு
UPDATED : மே 01, 2026 06:04 PM
ADDED : மே 01, 2026 06:05 PM
பாகூர்:
பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடம் நீக்குவதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்போவதாக, ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கூட்டமைப்பின் மாநில தலைவர் ரோக அருள்தாஸ், ஆதிதிராவிடர் மாணவர் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆனந்த பாஸ்கரன், அமைப்புச் செயலாளர் பொன்னிவேல், ஒருங்கிணைப்பாளர் மகேந்திரவேலன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:
ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பிரெஞ்சு மொழியை விருப்ப பாடமாகப் பயின்ற மாணவர்கள், இப்போது திடீரென அதைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழியை இரண்டாம் மொழியாக எடுத்திருந்த மாணவர்கள், இப்போது கட்டாயமாக வேறு ஒரு மொழிக்கு மாற வேண்டியுள்ளது. இது மாணவர்களுக்குக் கூடுதல் சுமையாகவும், மன அழுத்தமாகவும் அமையலாம்.
புதுச்சேரி மாணவர்கள், பிரெஞ்சு மொழி அறிவின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் பெற்று வந்த உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் எதிர்காலத்தில் குறைக்கக்கூடும். இதனைக் கண்டித்து கூட்டமைப்பு சார்பில், தொடர் போராட்டம் நடத்தப்படும்.
