செயின்ட் ஜோசப் பல்கலையில் 27ம் தேதி பட்டமளிப்பு விழா
செயின்ட் ஜோசப் பல்கலையில் 27ம் தேதி பட்டமளிப்பு விழா
UPDATED : செப் 26, 2025 09:13 AM
ADDED : செப் 26, 2025 09:14 AM
பெங்களூரு:
பெங்களூரு லால்பாக் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா, 27ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கும் விழாவில் 2,747 மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கப்படுகிறது.
கவர்னர் தாவர்சந்த் கெலாட், கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர், திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மூர்த்தி, செயின்ட் ஜோசப் பல்கலைக்கழக வேந்தர் டயோனிசியல் வாஸ், துணைவேந்தர் விக்டர் லோபோ ஆகியோர் மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கின்றனர்.
விழாவில் 2,009 பேருக்கு இளங்கலை பட்டமும், 738 பேருக்கு முதுகலை பட்டமும் வழங்கப்படுகிறது. விழாவில் என்.சி.சி., விளையாட்டு உள்ளிட்ட துறைகளில், பல்கலைக்கழகத்திற்காக பங்களிப்பு அளித்தவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.