UPDATED : ஏப் 16, 2024 12:00 AM
ADDED : ஏப் 16, 2024 10:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரைக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா முதல்வர் சுரேஷ் தலைமையில் நடந்தது.
செயலாளர் நடனகோபால் வரவேற்றார். முன்னாள் மாணவரான சிந்தஸிஸ் ஹோம் டெக்ஸ்டைல்ஸ் முன்னாள் தலைமை பொது மேலாளர் கிஷோர் 1126 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
அவர் பேசுகையில், வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும். நம் திறமை, ஆர்வம், செயல்பாடுகள் எதை நோக்கி இருக்க வேண்டும் என நாம்தான் தீர்மானிக்க வேண்டும். பல சமயங்களில் நம் உள்ளுணர்வு தான் நம்மை சரியான பாதையில் நடத்தி செல்லும் என்றார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துறைத் தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.