தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூட்டுறவு மேலாண்மை பயிற்சி சேர்க்கை: ஜூலை 20 கடைசி நாள்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி சேர்க்கை: ஜூலை 20 கடைசி நாள்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி சேர்க்கை: ஜூலை 20 கடைசி நாள்


UPDATED : ஜூலை 15, 2026 09:13 PM

ADDED : ஜூலை 15, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 09:13 PM ADDED : ஜூலை 15, 2026 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் ஜூலை 20 க்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார். அவர் கூறியதாவது, கூட்டுறவு மேலாண்மை பட்டய முழு நேர பயிற்சிக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சிக்கான மொத்த கட்டணம் ரூ.20,850. வயது 17 பூர்த்தியான பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 க்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேர ஜூலை 20 மாலை 5:00 மணி வரை https://www.tncu.tn.gov.in/icmapplicationform என்ற இணையதள முகவரியில், இணைய வழியில் மட்டுமே ரூ.100 விண்ணப்ப கட்டணம் க்யூ ஆர் கோட், யு.பி.ஐ., மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இணையவழியில் பூர்த்தி செய்த இணைய விண்ணப்பங்களை அச்சிட்டு பிரிண்ட் எடுத்து உரிய கல்வி சான்றிதழ்களின் அசல் சான்றினை சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நேரடியாக சென்று சான்றினை சரிபார்த்த பின், பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு முதல்வர், கூட்டுறவு மேலாண்மை நிலையம், காஞ்சிரங்கால் சிவகங்கையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 94980 63042ல் அழைக்கலாம் என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us