தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று துவக்கம்

10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று துவக்கம்

10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று துவக்கம்


UPDATED : ஏப் 21, 2025 12:00 AM

ADDED : ஏப் 21, 2025 11:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2025 12:00 AM ADDED : ஏப் 21, 2025 11:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மாவட்டத்தின் இரண்டு மையங்களில் இன்று துவங்குகிறது. வரும், 30 ம் தேதி வரை நடக்கிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 28ம் தேதி துவங்கியது. மாவட்டத்தில், 104 மையங்களில், 29 ஆயிரத்து, 899 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். 15ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைந்தது. தேர்வு மையங்களில் இருந்து மண்டல விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, விடைத்தாள் கொண்டு வரும் பணி, இரண்டு நாட்கள் நடந்தது.

நேற்று ஒவ்வொரு மையங்களில் முகாம் அலுவலர், முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வாளர் மற்றும் உதவி தேர்வர்களுக்கான பணி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது. இன்று (21ம் தேதி) முதல், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. வரும், 30ம் தேதி வரை தினமும் காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும்.

பணியில் 1,750 பேர்


முதல் நாள் முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வாளர் பணிகள் துவங்கும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலருடன் இணைந்து, விடைத்தாள் திருத்த முகாம் அலுவலர், கண்காணிப்பில் ஈடுபடுவர். வரும், 22 முதல் உதவி தேர்வர்கள் விடைத்தாள் குறிப்புகளை கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மேற்கொள்வர். மாவட்டத்தின் இரு மையங்களில் மதிப்பீட்டு அலுவலர்,மதிப்பெண் உள்ளீட்டாளர், சரிபார்க்கும் அலுவலர், அட்டவணையாளர் உட்பட, 1,750 பேர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். பத்து நாட்கள் நடைபெற உள்ள இப்பணி, வரும், 30ம் தேதியுடன் நிறைவு பெறும் என மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) காளிமுத்து கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us