ஆண்டனி பப்ளிக் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி துவக்கம்
ஆண்டனி பப்ளிக் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி துவக்கம்
UPDATED : ஆக 20, 2026 09:28 PM
ADDED : ஆக 20, 2026 09:29 PM
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை ஆண்டனி பப்ளிக் மேல்நிலை பள்ளியில், ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் அகாடெமி சார்பில், மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாணவிகளுக்கான கிரிக்கெட் பயிற்சி துவக்க விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி தாளாளர் ஜார்ஜ் யுவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் லிடியா ஜார்ஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினரான திண்டிவனம் அரசு கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் கோவிந்தசாமி , மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வென்ற மாணவர்கள் ஹேமந்த், செந்தமிழ், சிவபாலன் ஆகியோரை பாராட்டி கவுரவித்தார். மேலும், மாணவிகளுக்கான கிரிக்கெட் பயிற்சியை துவக்கி வைத்தார்.
இதில், கிரிக்கெட் பயிற்சியாளர் பத்து, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.
