தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய பிராண்ட் அடையாளத்தை வெளியிட்டது கிராம்டன்!

புதிய பிராண்ட் அடையாளத்தை வெளியிட்டது கிராம்டன்!

புதிய பிராண்ட் அடையாளத்தை வெளியிட்டது கிராம்டன்!


UPDATED : ஆக 23, 2026 04:32 PM

ADDED : ஆக 23, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 04:32 PM ADDED : ஆக 23, 2026 04:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை:
இந்தியாவின் முன்னணி மின்சாதன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கிராம்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிகல்ஸ், 'கிராம்டன் 2.0' என்ற தனது புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன் புதிய லோகோ சின்னம், புதிய விளம்பர வாசகம், மற்றும் 'கிராம்டன் ரையான்' என்ற அதிநவீன சூப்பர் - பிரீமியம் பிராண்டையும் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், இந்த புதிய தோற்றத்தின் முக்கிய அம்சமாக 'செஃபயர்' என்ற புதிய லோகோ சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. நீல ரத்தினத்தின் நீடித்த தன்மை மற்றும் கிரேக்க தென்றல் காற்று ஆகியவற்றின் தாக்கத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த சின்னம், நிறுவனத்தின் நுகர்வோர் கொள்கை மற்றும் தொடர் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது.

அத்துடன், 'அமேசிங், எவ்ரி டே' என்ற புதிய டேக்லைனையும் நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோரின் அன்றாட வாழ்வை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் எளிமையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் மாற்றுவதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் ஒரு பகுதியாக அறிமுகமாகியுள்ள 'கிராம்டன் ரையான்' பிராண்ட், நவீன தொழில்நுட்பம் மற்றும் அழகிய வடிவமைப்பை விரும்பும் நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ளது.

இதன் முதல் தயாரிப்பாக, தூய்மையான குடிநீரை வழங்கும் 'வாட்டர் பயோபயர்' என்ற பிரீமியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவனம் சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும், ஆற்றல் மேலாண்மைத் துறையில் நிலையான தீர்வுகளை வழங்கும் 'எனர்ஜியான்' தளத்தையும் நிறுவனம் வலுப்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரமீத் கோஷ் கூறுகையில், “85 ஆண்டுகளுக்கும் மேலான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொண்டு, அடுத்த தலைமுறைக்கான புதிய மாற்றங்களை நோக்கி கிராம்டன் நகர்ந்து வருகிறது. மேலும், புதிய பிராண்ட் அடையாளம் மற்றும் பிரீமியம் தயாரிப்புகள் மூலம் நவீன இந்திய நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும்,” என அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us