sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆதார் திருத்த மையங்களில் அலைமோதும் கூட்டம்: தேவை நடவடிக்கை

/

ஆதார் திருத்த மையங்களில் அலைமோதும் கூட்டம்: தேவை நடவடிக்கை

ஆதார் திருத்த மையங்களில் அலைமோதும் கூட்டம்: தேவை நடவடிக்கை

ஆதார் திருத்த மையங்களில் அலைமோதும் கூட்டம்: தேவை நடவடிக்கை


UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM

ADDED : ஜூலை 11, 2024 07:56 AM

Google News

UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM ADDED : ஜூலை 11, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆதார் புதுப்பித்தல், புதிய ஆதார் எடுப்பதற்கு பொதுமக்கள் குவிந்து வருவதால் அவசர நிலையை கருத்தில் கொண்டு புதிய ஆதார் மையங்களை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் பெறுதல், கல்லூரி, பள்ளிகளில் சேர்த்தல், பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து விதமான அரசு அலுவல் முறைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் பள்ளி மாணவர்கள் ஆதார் புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளிக் கல்வியை முடித்து உயிர்கல்விக்கு சேர வேண்டிய மாணவர்களுக்கும் ஆதார் புதுப்பித்தல் அவசியமாகிறது. இவ்வளவு முக்கியம் வாய்ந்த ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், மத்திய அரசின் தபால் அலுவலகங்கள், தேசிய மயமாக்கப்பட்ட சில வங்கிகள் என சில இடங்களில் மட்டுமே ஆதார் மையங்கள் உள்ளன.

இந்த மையங்களில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 30 நபர்களுக்கு மேல் ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என மைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். வத்தலக்குண்டு பாண்டியன் கிராம வங்கியில் மூன்று நாட்களாக ஆதார் மைய இணையதள இணைப்பு கிடைக்கவே இல்லை. இம்மையத்திற்கு மூன்று நாட்களாக கிராமங்களில் இருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு பெற்றோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. வங்கி ஊழியர்களுடன் தகராறு ஏற்படுகிறது.இதை கருதி புதிய ஆதார் மையங்களை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

இணைப்பு கிடைக்காது ஏமாற்றம்


கமலேஷ்வர், கல்லுாரி மாணவர், வத்தலக்குண்டு: மூன்று நாட்களாக பாண்டியன் கிராம வங்கிக்கு வந்து கொண்டிருக்கிறேன். ஆதார் இணையதள இணைப்பு கிடைக்காமல் திரும்பிச் சென்றேன். சுற்று கிராமங்களில் இருந்து பள்ளி மாணவர்களும் ஏராளமானோர் இம் மையத்திற்கு வந்து திரும்பி செல்கின்றனர். பொதுமக்களின் சிரமத்தை போக்க கூடுதல் மையங்களை திறக்க வேண்டும். இல்லையேல் பள்ளிகளிலே ஆதார் புதுப்பித்தலுக்கான ஏற்பட்டினை செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us