தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 06, 2026 04:53 PM

ADDED : ஜூலை 06, 2026 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 04:53 PM ADDED : ஜூலை 06, 2026 04:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம்:
திருச்சி ஜமால் முகமது கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில் சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு (அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் தேசிய தகுதித் தேர்வு) குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

தேர்வின் முக்கியத்துவம் குறித்து நடந்த நிகழ்ச்சியில் புதுடில்லி சி.எஸ்.ஐ.ஆர்., வேதியியல் துறை அகாடமி பயிற்சியக இயக்குநர் மற்றும் தலைமை நிறுவனர் சின்னசேலத்தைச் சேர்ந்த சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

கல்லுாரியின் இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் சையத் அலி பாதுஷா, ஜாகிர்உசேன், சீராஜ்தீன், லோகநதான், அன்வர்சாதிக், புருேஷாத்தமன், பெரியசாமி, முனீர் அகமத், அப்துல்வாஷித், சையத் அபுதாஹீர், யாசீன் மவுலானா, பரூக் பாஷா, முஜாபர்கனி, மசூத் அகமது மற்றும் அனைத்து வேதியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சீனிவாசன், சின்னசேலத்தைச் சேர்ந்த தங்கராஜி - வளர்மதி தம்பதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us