sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சைபர் கிரைம்: பெற்றோர்கள் உஷாராக இருக்க போலீசார் அறிவுரை

/

சைபர் கிரைம்: பெற்றோர்கள் உஷாராக இருக்க போலீசார் அறிவுரை

சைபர் கிரைம்: பெற்றோர்கள் உஷாராக இருக்க போலீசார் அறிவுரை

சைபர் கிரைம்: பெற்றோர்கள் உஷாராக இருக்க போலீசார் அறிவுரை


UPDATED : நவ 02, 2024 12:00 AM

ADDED : நவ 02, 2024 12:07 PM

Google News

UPDATED : நவ 02, 2024 12:00 AM ADDED : நவ 02, 2024 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
பள்ளி, கல்லுாரி மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து நுாதன மோசடிகள் அரங்கேறி வருகிறது. உஷாராக இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:


புதுச்சேரியில் பெற்றோர்களை குறி வைத்து பணம் பறிக்கும் குற்ற செயல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சி.பி.ஐ., போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பேசுவதாக கூறி மொபைலில் அறிமுகமாகும் நபர்கள், உங்கள் மகன் கேங்க்ரேப், போதைப் பொருள், ஹவாலா மற்றும் செக்ஸ் படம் பார்த்த வழக்குகளில் சிக்கி, கைது செய்யப்பட்டுள்ளான்.

வெளியே மீடியா உள்ளது. உங்கள் பிள்ளைகளின் முகங்களை காட்டினால் எதிர்காலம் காலியாகிவிடும். எனவே உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் வந்துவிடுங்கள் என்று தகவலை தெரிவிக்கின்றனர். இதை கேட்டதும் பதற்றம் அடையும் பெற்றோர்கள் எப்படியாவது தங்களது மகனை தப்பிக்க செய்யுங்கள் என்று கதறி அழுது புலம்புகின்றனர்.

இந்த வழக்கிலிருந்து உங்கள் மகனை விடுவிக்க நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் அனுப்புங்கள் என, கூறுகின்றனர்.

இதனால் பெற்றோர் அவசரத்தில் அவர்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை செலுத்தி விடுகின்றனர். அதன் பிறகுதான் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, கல்லுாரியை பெற்றோர்கள் தொடர்பு கொண்டு கேட்கும்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கின்றனர்.

இதுபோன்று மிரட்டி பணம் பறித்தது சம்பந்தமாக 30 புகார்கள் பதிவாகியுள்ளது. இணைய வழி மோசடிக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து 20 லட்சம் வரை இதுவரை பொது மக்கள் இழந்துள்ளனர்.

இது சம்பந்தமாக நாங்கள் விசாரணை மேற்கொண்டதில் இந்த அழைப்புகள் பாகிஸ்தான் உள்ளிட்ட இதர வெளிநாடுகளில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இது போன்று எந்த அழைப்பு வந்தாலும் நம்ப வேண்டாம்.

இணையவழி சம்பந்தமாக எந்த சந்தேகமாக இருந்தாலும், பாதிக்கபட்டிருந்தாலும் உடனே இணைய வழி காவல் நிலையத்திற்கு 1930 என்ற இலவச எண் அல்லது 94892 05246 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்றனர்.

சைபர் கிரைம் பரிந்துரை


புதுச்சேரியில் நுாதன மோசடிகள் அரங்கேறி வருவதால் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பள்ளி கல்வித் துறைக்கு பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us