UPDATED : நவ 16, 2024 12:00 AM
ADDED : நவ 16, 2024 10:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சார்பில் மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்.சி., ஐ.டி., படிக்கும் மாணவர்கள் சைபர் கிரைம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் கோவை சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.
அவர்களுக்கு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார், இணைய குற்றங்கள், மோசடி, தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைதளங்கள், எம். கவாச் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தனர்.