பி.ஆர்க்., படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பி.ஆர்க்., படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
UPDATED : ஜூலை 09, 2026 12:12 PM
ADDED : ஜூலை 09, 2026 12:15 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 2026 - 27ம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத பி.டெக்., படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், பி.ஆர்க்., படிப்புக்கு மட்டும் விண்ணப்பிக்க 10ம் தேதி மாலை 05:00 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கால அவகாசம் நீட்டிக்க படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் www.centacpuduherry.in சென்டாக் இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.
குறைகள் ஏதேனும் இருந்தால் உங்களது டேஷ் போர்டு வழியாக தொடர்பு கொண்டால் பதில் அளிக்கப்படும். மேலும் சந்தேகங்களுக்கு 0413 - 2655570; 2655571 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
