தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூட்டுறவு டிப்ளமா பயிற்சிக்கு தேதி நீட்டிப்பு

கூட்டுறவு டிப்ளமா பயிற்சிக்கு தேதி நீட்டிப்பு

கூட்டுறவு டிப்ளமா பயிற்சிக்கு தேதி நீட்டிப்பு


UPDATED : ஜூலை 22, 2026 07:49 PM

ADDED : ஜூலை 22, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2026 07:49 PM ADDED : ஜூலை 22, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
முழு நேர கூட்டுறவு மேலாண் டிப்ளமா பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் தேதி ஆக., 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, அத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் யோக விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:


காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 2026 - 27ம் நிதி ஆண்டின் முழு நேர கூட்டுறவு மேலாண் டிப்ளமா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் மூன்று ஆண்டு டிப்ளமா படித்தவர்கள் ஜூலை 1ம் தேதி அன்று 17 வயது நிரம்பியவதாக இருக்க வேண்டும்.

ஜூலை 31ம் தேதி மாலை, 05:00 மணி வரையில், www.tncu.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.

தற்போது, ஆக., 3ம் தேதி வரையில் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இணைய தளத்தில் அல்லாத விண்ணப்பங்களை முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த பயிற்சி தமிழில் கற்றுக் கொடுக்கப்படும். 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வான பயிற்சியாளர் பயிற்சி கட்டணமாக, 20,750 ரூபாய், 'பில் டெஸ்க் பேமென்ட் கேட்'வே வாயிலாக செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம், எண்: 5ஏ வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் என்கிற முகவரி 044 - 2723 7699 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us