தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு


UPDATED : அக் 27, 2026 02:45 PM

ADDED : அக் 27, 2026 02:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 02:45 PM ADDED : அக் 27, 2026 02:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:

முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை பெற ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 36 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்கள் அக்டோபர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் நவம்பர் 9ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய குவாக்கரெல்லி சைமண்டஸ் (க்யூ.எஸ்.,) தரவரிசையில் முதல் 250 இடத்திற்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், பட்டப்படிப்பில் 60 சதவீம் தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல், நிதி, மனிதநேயம், கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள் சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து முதுகலை பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெறுபவராக இருக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.bcmbcmw.tn.gov.in/welfschemes miniorities.htm என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கி, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us