பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க முடிவு
பாரதியார் பல்கலைக்கூட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க முடிவு
UPDATED : ஜூன் 06, 2024 12:00 AM
ADDED : ஜூன் 06, 2024 09:54 AM
புதுச்சேரி:
பாரதியார் பல்கலைக்கூட இசை, நடனம், நுண்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் பி.பி.ஏ., இசை டிகிரி படிப்பில் வாய்ப்பாட்டு, வீணை, நாதஸ்வரம், புல்லாங்குழல், மிருந்தங்கம், தவில், இந்துஸ்தானி வாய்ப்பாட்டு படிப்புகள் உள்ளன.
பி.பி.ஏ., நடன படிப்பில் பரதநாட்டியம், பி.எப்.ஏ., நுண்கலை படிப்பில் ஓவியம், அப்பளைடு ஆர்ட், சிற்பம், டெக்ஸ்டைல் டிசன் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் கடந்த மே 19ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. விண்ணப்பிக்க காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.
இந்நிலையில் பாரதியார் பல்கலைகூட படிப்பு களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கோப்பு ரெடியாகி உள்ளது. அதிகாரபூர்வாக எத்தனை நாட்கள் விண்ணப்பிக்க நீட்டிக்கப்படுகின்றது என்பது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.
பி.வி.ஏ.,என்படும் வியூவல் ஆர்ட்ஸ் படிப்பில் 40 இடங்கள், பி.பி.ஏ., இசை படிப்பில் 20 சீட்டுகள், பி.பி.ஏ., நடன படிப்பில் 15 இடங்கள் உள்ளது குறிப்பிடதக்கது.