UPDATED : ஆக 30, 2026 10:32 AM
ADDED : ஆக 30, 2026 10:32 AM
சென்னை: சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை:
தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்பார் என, 12 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த். கட்சி தொண்டர்கள், அமைச்சர்களாகி, பச்சை மையில் கையெழுத்து போடுவர் என்று கூறினார். அது இப்போது நடந்துள்ளது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் கூடிய, நவீன சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இதற்காக, அரசு 277 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஐந்து லட்சம் மாணவர்களுக்கு, நவீன சைக்கிள்கள் கிடைக்கும். இதற்கென 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்கள், ஆசிரியர் தேர்வாணையம் வாயிலாக நிரப்பப்படும். மாநிலம் முழுதும் உள்ள 575 விடுதிகளில், 'சி.சி.டி.வி.,' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாதந்தோறும் விடுதிகளில் ஆய்வுகள் நடக்கின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.
