தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய வகுப்பறைகள் கட்டியும் திறப்பு தாமதம்!

புதிய வகுப்பறைகள் கட்டியும் திறப்பு தாமதம்!

புதிய வகுப்பறைகள் கட்டியும் திறப்பு தாமதம்!


UPDATED : ஜூலை 09, 2024 12:00 AM

ADDED : ஜூலை 09, 2024 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2024 12:00 AM ADDED : ஜூலை 09, 2024 10:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:
2022ல் திருநெல்வேலி மாவட்ட பள்ளி ஒன்றில் சேதமடைந்த கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில்மூன்று மாணவர்கள் பலியாகினர். அதன் பின் தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து இடியும் நிலையில் உள்ள பழமையான கட்டடங்களை இடிக்க அறிவுறுத்தியது.

அதன் படி விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கப்பட்டன.

இதில் ஒரு சில கட்டடங்கள் மட்டுமே மாணவர்களால் வகுப்பறையாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. மற்ற கட்டடங்கள் மாணவர்கள் வகுப்பறையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இடியும்நிலையில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டதால் பள்ளிகளில் மாணவர்கள் இடநெருக்கடி உடன் கல்வி பயல்கின்றனர். புதிய வகுப்பறை கட்டுவதற்கான பணிகள் பல பள்ளிகளில் துவங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்களும் பாடம் எடுப்பதில் சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக துவக்க, நடுநிலை பள்ளிகளில் இந்த பிரச்னை அதிகளவில் உள்ளது.

மேலும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வதுகுறைவதால் மாணவர்கள்,இந்த இட நெருக்கடி பிரச்னை விரைவில் தீரும் என பள்ளி கல்வித்துறை நிர்வாகமும் கூடுதல் கட்டடங்கள் கட்ட திட்ட வரைவு அனுப்புவதில்லை. இதை கட்டும் ஊரக வளர்ச்சி துறையும் மாணவர்களின் எண்ணிக்கையை பார்த்து கட்டுவதை நிறுத்தி விடுகின்றனர்.

இது ஒரு வகையில் பள்ளியில் உள்ள உட்கட்டமைப்பு வசதியை சீர்குலைக்கும் நடவடிக்கையாக தான் ஆசிரியர்கள் பார்க்கின்றனர். இதே போல் ஓட்டு கட்டடமாக உள்ள பள்ளிக்கு தேவை அறிந்து வகுப்பறைகள் கட்டினால் அவற்றில் மின் வினியோகம் கொடுக்கப்படாமல் தாமதம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் பழைய ஓட்டு கட்டடங்களிலே படிக்கும் சூழல் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் இடிக்கப்பட்ட கட்டடங்களில் எத்தனை கட்டப்பட்டுள்ளது என ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் மாணவர்களுக்கு இட நெருக்கடி உள்ள இடங்களில் விரைவில் கட்டடங்களை கட்டி வகுப்பறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கட்டி முடிந்து மின் வினியோகம் கொடுக்கப்படாமல் உள்ள கட்டடங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us