UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 05:17 PM

புதுடில்லி:
டில்லி பல்கலையில் இளநிலை முதலாம் ஆண்டுக்கான வகுப்பு வரும் 29ம் தேதி துவங்குகிறது.
டில்லி பல்கலை 2024- 2025 கல்வி ஆண்டுக்கு இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் 29ம் தேதி வகுப்புகள் துவங்குகிறது. கடந்த 1ம் தேதி வகுப்புகள் துவங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கியூட் சுழைவுத் தேர்வு முடிவு தாமதம் உட்பட பல காரணங்களால் வகுப்புகளை துவக்குவது ஒத்தி வைக்கப்பட்டது.
இளநிலை மாணவர்களுக்கான இந்த ஆண்டின் இறுதித் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 7ம் தேதி துவங்கும்.
அதேபோல, இரண்டாவது செமஸ்டர் அடுத்த ஆண்டு ஜனவரி 27ல் துவங்கும். செயல்முறை தேர்வுகள் மே 25ல் துவங்கும். இந்தக் கல்வி ஆண்டுக்கான கோடை விடுமுறை அடுத்த ஆண்டு ஜூன் 29 முதல் ஜூலை 20 வரை விடப்படும்.
இந்த தகவலை டில்லி பல்கலை தெரிவித்துள்ளது.