தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்: டிட்டோ ஜாக் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்: டிட்டோ ஜாக் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்: டிட்டோ ஜாக் வலியுறுத்தல்


UPDATED : ஆக 21, 2026 04:17 PM

ADDED : ஆக 21, 2026 04:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2026 04:17 PM ADDED : ஆக 21, 2026 04:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
55 வயதில் தகுதித்தேர்வு எழுதும் ஆசிரியர்களின் பணிக்காலம், உயர்கல்வி தகுதிகளை கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோ ஜாக்) மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர் கூறியதாவது:


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் என்பதை 40 சதவீதமாக அதாவது 55 மதிப்பெண்ணாக குறைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிப்போம் என முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதற்கு முன்னோட்டமாக 'டேப்ஸ்' திட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவோம் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

அதனை இம்மாத இறுதிக்குள் நடைமுறைபடுத்தி ஓய்வூதியம் இல்லாத இந்த ஆசிரியர் சமூகத்திற்கு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி ஆசிரியர்களை அலைக்கழிக்கக் கூடாது. ஆசிரியர்களை முழுமையான கற்பித்தல் பணியிலே ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்.

வரும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 55 வயதில் தகுதித்தேர்வு எழுதும் ஆசிரியர்களின் பணிக்காலம், உயர்கல்வி தகுதிகளை கொண்டு 'வெயிட்டேஜ்' மதிப்பெண்களை வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us