தனியார் பள்ளி சேர்க்கை மறுப்பு அரசியலமைப்பை மீறியதாகாது
தனியார் பள்ளி சேர்க்கை மறுப்பு அரசியலமைப்பை மீறியதாகாது
UPDATED : ஆக 15, 2025 12:00 AM
ADDED : ஆக 15, 2025 11:42 AM
பெலகாவி:
பெலகாவி மாவட்டம், ஸ்ரீநகரை சேர்ந்தவர் முசாமில் காசி. தன் மகனை தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.,யில் சேர்க்க விண்ணப்பித்திருந்தார். 2025 பிப்., 28 ல், முசாமில் மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில், உங்கள் மகன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது.
அவரும் பள்ளிக்கு சென்று மகனை பள்ளியில் சேர்ப்பது குறித்து பேசியுள்ளார். அப்போது பள்ளி தரப்பில், உங்கள் விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் உள்ளது என்று கூறி உள்ளனர்.
இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரித்த நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், 'மனுதாரரின் குழந்தையை பள்ளியில் சேர்க்க மறுப்பது, அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21ஐ மீறியதாகாது.
எனவே, மனுதாரர் வேறு பள்ளியில் விண்ணப்பித்து, சேர்க்கை பெறலாம்' என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

