தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டென்மார்க் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

டென்மார்க் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

டென்மார்க் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை


UPDATED : நவ 09, 2025 09:32 AM

ADDED : நவ 09, 2025 09:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2025 09:32 AM ADDED : நவ 09, 2025 09:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபன்ஹேகன்:
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, டென்மார்க்கிலும் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், சிறார்கள் சமீப காலமாக சமூக ஊடகங்களில் மூழ்கியிருப்பது கவலை அளிப்பதாக, அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கடந்த மாதம் பார்லிமென்ட்டில் உரையாற்றினார்.

'ஸ்னாப்சாட், யு டியூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக்' போன்ற சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுவதாகக் கூறி அவற்றுக்கு தடைவிதிக்கவேண்டும் என கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளும், இளைஞர்களும், துாக்கம், அமைதி, அறிவை இழந்து ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாவது கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்தொழில் நுட்ப அமைச்சர் கரோலின் ஸ்டேஜ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us