sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டிஜிட்டல் கைது: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

/

டிஜிட்டல் கைது: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டிஜிட்டல் கைது: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டிஜிட்டல் கைது: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


UPDATED : பிப் 11, 2026 08:24 AM

ADDED : பிப் 11, 2026 08:27 AM

Google News

UPDATED : பிப் 11, 2026 08:24 AM ADDED : பிப் 11, 2026 08:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'டிஜிட்டல்' கைது மோசடிகளை கொள்ளை என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தை கையாள ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஆகியவற்றுடன் இணைந்து, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

போலீஸ், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், மொபைல் போன் வீடியோ அழைப்பு மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதே, 'டிஜிட்டல் கைது' எனப்படுகிறது. மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடி அதிகளவில் நடக்கிறது.

இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் நடந்து வருகிறது. முந்தைய விசாரணையில், நாடு முழுதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதில் ஒத்துழைப்பு தரும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவு:

நாடு முழுதும் டிஜிட்டல் கைது மோசடியால், 54,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பல சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகமாக உள்ளது. இத்தகைய குற்றங்கள் வங்கி அதிகாரிகளின் அலட்சியம் அல்லது உடந்தை காரணமாகவே நடக்கின்றன. இதில், ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை கையாள, ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஆகியவற்றுடன் இணைந்து, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க, ரிசர்வ் வங்கி மற்றும் தொலைத்தொடர்பு துறை இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட அமர்வு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.






      Dinamalar
      Follow us