UPDATED : நவ 11, 2024 12:00 AM
ADDED : நவ 11, 2024 08:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்:
தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில் பேரையூர் தாலுகா கவுண்டன்பட்டியில் டிஜிட்டல் கிராப் சர்வே நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் பரமேஸ்வரன் டிஜிட்டல் கிராப் சர்வேயின் நோக்கம், முக்கியத்துவத்தை மாணவர்களிடையே பேசினார். உழவியல் துறை தலைவர்விஜயகுமார், உதவி பேராசிரியர்கள் சதுரகிரி, முல்லை வேந்தன், விக்னேஸ்வரி மேற்பார்வையில் சாகுபடி பயிர்கள் குறித்த தரவுகள் சேமிக்கும் பணி நடந்தது.
டி.கல்லுப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி ஏற்பாடு செய்தார். வேளாண் அலுவலர்கள் சரவணகுமார், கண்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் பங்கேற்றனர்.