தினமலர் - பட்டம் மெகா வினாடி- வினா போட்டி: போட்டி போட்டு பதில் அளித்த மாணவ, மாணவியர்
தினமலர் - பட்டம் மெகா வினாடி- வினா போட்டி: போட்டி போட்டு பதில் அளித்த மாணவ, மாணவியர்
UPDATED : அக் 29, 2024 12:00 AM
ADDED : அக் 29, 2024 10:17 AM
கோவை:
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில், நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் போட்டி போட்டு பதில் அளித்தனர்.
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சார்பில், 2018ம் ஆண்டு முதல் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான வினாடி வினா விருது, 2024-25 போட்டி, தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த, 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
கோ-ஸ்பான்சர் ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
நேற்று வேடபட்டி, பி.எஸ்.ஜி., உயர்நிலைப்பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 100 மாணவ, மாணவியர்தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், இ அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் மென்மிதா, கிருத்திகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் சி.பரிமளா பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்வழங்கி னார். வினாடி-வினா ஒருங்கிணைப்பாளர் ஜெ.பரிமளா, ஆசிரியர் கோகிலவாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.