தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி ;சாதித்து காண்பித்த மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர்
தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி ;சாதித்து காண்பித்த மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர்
UPDATED : நவ 13, 2025 07:11 AM
ADDED : நவ 13, 2025 07:12 AM
கோவை:
உக்கடம் கோட்டைமேடுமாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, தினமலர் பட்டம் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா நிகழ்ச்சியில், மாணவ - மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம், இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவியரின் பாடப்பகுதிகள் சார்ந்த உள்ளார்ந்த சிந்தனை திறன் மற்றும் பொது அறிவுத் திறன்களை மேம்படுத்தவும், படிப்பின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்துத் தேர்வில், 190 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில், 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து இறுதி சுற்றில் பங்கேற்றனர்.
'டி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் அப்ரின் மற்றும் நிஷானா பாத்திமா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
'பி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர்கள் முகமது ரினாஸ் மற்றும் முகமது அஸ்பல்; 'இ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் முகமது இஸ்மாயில், அஹ்மத் ரஷாத்; 'ஏ' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர்கள் முகமது ஆரிப், விஷ்ருத்; 'சி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர்கள் சால்மன் பாரிஸ் மற்றும் அகிலேஷ்வர்மா ஆகியோர், அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி தலைமையாசிரியை கிறிஸ்டி அன்புமலர் பரிசுகள் வழங்கினார்.
கிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில், 80 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள், இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
'டி' அணியை சேர்ந்த மிருதுளா மற்றும் கனிஷ்கா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
அரையிறுதிக்கு, 'ஜி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஜெய பிரியா, ஏழாம் வகுப்பு மாணவன் ஜோயல் ஜார்ஜ்; 'ஏ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஹரிஹரன், கிஷோர்; 'பி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி அழகு அனுசியா, எட்டாம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ; 'எப்' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் ஸ்ரீ லக்ஷீன், மாணவி தியா பிரியா ஆகியோர் தகுதி பெற்றனர். பள்ளி தலைமையாசிரியை சாந்தி, பரிசுகள் வழங்கினார்.
சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில், 50 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
'எச்' அணியை சேர்ந்த அஜ்மல் பிலால் மற்றும் மபாஸ்ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
அரையிறுதிக்கு 'எப்' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் முகமது பாசில் மற்றும் நிஜாமுதீன் ; 'ஏ' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் தமீம் அரபாத் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பூபேஷ்; 'டி' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி முகமது சனா, எட்டாம் வகுப்பு மாணவன் சுஹைல்; 'இ' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் சையத் அர்ஷாத், ஒன்பதாம் வகுப்பு மாணவி ரின்சானா ஆகியோர் தகுதி பெற்றனர். பள்ளி தலைமையாசியர் ஜெகநாதன் பரிசுகள் வழங்கினார்.
ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்துத் தேர்வில் 65 மாணவியர் பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவிகள் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
'ஏ' அணியை சேர்ந்த சஸ்மிதா மற்றும் வைஷ்ணவி பிரியா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. அரையிறுதிக்கு, 'சி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் ஹீனமோல் மற்றும் அப்சிரா; 'ஜி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி சிவானி, ஏழாம் வகுப்பு மாணவி அனபா; 'எப்' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ரீமா பாத்திமா, எட்டாம் வகுப்பு மாணவி ஜுமனாஹசீன்; 'இ' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் ஷாபியா மற்றும் பவதாரணி ஆகியோர் தகுதி பெற்றனர். பள்ளி தலைமையாசிரியை அருந்ததி மற்றும் உதவிதலைமையாசிரியை சுமதி ஆகியோர் பரிசுகள் வழங்கினார்.
மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவியருக்காக இப்போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளது. 'இப்போட்டியின் மூலம் நாட்டு நடப்புகள், நவீன தொழில்நுட்பம், அரிய செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது' என, பங்கேற்ற மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

